storee-Book Store

மலர்ச்சி இறைவணக்கப் பாடல்

கருவாக்கி உருவாக்கி எனையாண்டு
காத்தருளும் இறைவா நன்றி!

எங்கும் நிறைந்தோனே
எல்லை இலாதானே
எங்கேயும் எப்போதும்
என் குலம் காப்பவனே

நெஞ்சம் துணிய துணையாய் வருவாய்
நேர்மறை உணர்வுகள் பெருகிடச் செய்வாய்

உடலில் உறுதியை பெரிதாய் தருவாய்
உனை உணரும் அறிவை என்னுள் அருள்வாய்

சுற்றம் அனைத்தும் காப்பவனே
செய்தொழிலில் ஏற்றம் தருபவனே

எடுத்த செயலில் வெற்றி கொடு
என் ஆற்றல் பெருகிட அருளை கொடு

வல்லமை தந்து நீ வளர்ச்சி கொடு
அகத்திலும் புறத்திலும் மலர்ச்சி கொடு!

- பரமன் பச்சைமுத்து

Events
உள்ளெ கனல்